முருங்கையின் பயன்கள்
“முருங்கை தின்னா முன்னூறு வராது” என்பது நமது கிராமங்களில் சொல்லப்படும் ஒரு பழமொழி. இதன் பொருள் என்னவென்றால், முருங்கை இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்கள் 300 நோய்களிடம் இருந்து பாதுகாப்பு பெறுவர் என்பதே ஆகும். முருங்கை இலை, பூக்கள், காய் என் அனைத்தும் மிகச்சிறந்த மருத்துவ குணம் உடைய உணவுப்பொருள்கள் ஆகும்
முருங்கை கீரையின் பயன்கள் :
*முருங்கை இலையில் பாலாடையை விட 2 மடங்கு புரோட்டீன் இருக்கிறது
*ஆரஞ்சைவிட மடங்கு வைட்டமின் சி நிறைந்திருக்கிறது.
*வாழைப்பழத்தைவிட 3 மடங்கு பொட்டாசியம் இருக்கிறது.
*கேரட்டைவிட 4 மடங்கு வைட்டமின் ஏ உள்ளது
*பாலைவிட 4 மடங்கு கால்சியம் உள்ளது.
*உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் முருங்கையிலை கொண்டுள்ளது என பட்டியலிடுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
*முருங்கை கீரையை அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் பித்த மயக்கம், மலச்சிக்கல், கண்நோய் கபம், மந்தம் போன்றவை குணமாகும்.
*உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் வாரத்தில் இரண்டு முறை முருங்கைகீரை சாப்பிட்டு வர உடல் சூடு தணியும்.
*முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் இரத்த சோகை வராமல் தடுக்கலாம்.
உடல் அழகும், பலமும், தெம்பும் கிடைக்கும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும்.
*முருங்கை இலை சாறு இரத்தசுத்தி செய்வதுடன், எலும்புகளையும் வலுப்படுத்தும்.
கர்ப்பப் பையை வலுப்படுத்தும், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும்.
*முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும்.
*ஆஸ்துமா, மார்புசளி, சைனஸ் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை ரசம் அல்லது சூப் மிகவும் நல்ல பலன் தரும்.
*பித்த மயக்கம், கண் நோய், சொரிய மாந்தம் முதலியவை நீங்கும் இருமல், குரல் கம்மல், தொண்டை தொடர்பான நோய்களை நீக்குவதிலும் முருங்கை முக்கிய பங்கு வகிக்கிறது. மலச்சிக்கலை போக்கும்.
*மெலிந்த தேகம் உள்ளவர்கள் வாரம் இருமுறை முருங்கைக் கீரை உண்டு வந்தால் உடல் தேறும்.
*முருங்கை இலை இரத்த விருத்திக்கும், விந்து விருத்திக்கும் சிறந்தது.
*முருங்கை கீரை சாப்பிடாதவர்கள் முருங்கை இலையை நிழலில் காயவைத்து பொடி செய்து தினமும் சாம்பார் போன்றவற்றில் சேர்த்து சாப்பிடலாம். தினமும் 8 முதல் 24 கிராம் முருங்கைப்பொடி உணவில் சேர்த்துக்கொள்ளும் போது உடல் மிக ஆரோக்கியமாக இருக்கும்.
Comments
Post a Comment