பச்சை பயறு பயன்கள்
பாசி பயறில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பாசி பயறில் விட்டமின் பி9 (ஃபோலேட்டுகள்) மிகஅதிகளவும், பி1 (தயாமின்) அதிகளவும் காணப்படுகின்றன. மேலும் இதில் விட்டமின் பி5 (நியாசின்), பி6 (பைரிக்டாஸின்), பி2 (ரிபோஃப்ளோவின்), விட்டமின் சி, ஏ ஆகியவையும் உள்ளன. இதில் தாதுஉப்புக்களான செம்புச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் ஆகியவை மிகஅதிகளவும், மெக்னீசியம், மாங்கனீசு ஆகியவை அதிகளவும் காணப்படுகின்றன. மேலும் இதில் செலீனியம், கால்சியம், துத்தநாகம், பொட்டாசியம் ஆகியவையும் உள்ளன. இதில் அதிகளவு நார்ச்சத்து, புரதச்சத்து, கார்போஹைட்ரேட், அமினோ அமிலங்கள் காணப்படுகின்றன. பாசி பயறு – மருத்துவப் பண்புகள் பாசி பயறில் காணப்படும் என்சைம்கள், ஊட்டச்சத்துக்கள், ஆன்டிஆக்ஸிஜென்டுகள் ஆகியவை உடல்நலத்தை பாதுகாக்கின்றன. இப்பயறானது கண்கள், கேசம், நகங்கள், கல்லீரல், சருமம் ஆகியவற்றின் நலத்தை மேம்படுத்துகிறது. மேலும் இது இரத்த ஓட்டம் சீராக நடைபெற உதவுகிறது. செரிமானத்தை மேம்படுத்த பாசி பயறானது செரிமானத்தை மேம்படுத்த தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இப்பயறில் காணப்படும் கரையக்கூடிய நார்ச்சத்தான பெக்...