Bathing Steps & Definition by Agasthiyar - Reason behind the Bathing

Bathing steps & Definition by Agasthiyar 

Reason behind the bathing 

மனிதன் குளிக்க துவங்கிய நாள் முதல் இன்று வரை அதன் முறைகள் மற்றும் பயன்கள் வெவ்வேறு பரிணாமத்தில் பேசப்பட்டுவருகின்றது. உண்மையான காரணம் மற்றும் குளியலின் முறையை அகத்தியர் என்னும் முனிவர் பலநூறு ஆண்டுகள் முன்பே வரையருத்துவிட்டார் கீழ்க்கண்ட முறையில் : 
அகத்தியர்

குளியலின் பின்னுள்ள உண்மை காரணம் : 

ஆதி கால மனிதன் உணவிற்காக, காடு மலை போன்று வெவ்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்ள நேரிடும். அப்பயணத்தின்பொழுது கீறல்கள், சிராய்ப்புகள் மற்றும் சிறு சிறு காயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. கண்ணுக்கு புலப்படாத வகையில் நம் உடலில் ஏற்படும் சிறு காயங்கள் பெரிதாக வலியை ஏற்படுத்தாது, ஆகையால் அதனை கண்டறிய நீர் அதன் மேல் பட்டால் சிறு எரிச்சல் உண்டாகும் என்பதை உணர்ந்து குளியல் மூலமாக உடம்பில் உள்ள அனைத்து சிறு காயங்களையும் கண்டறிய குளியல் முறையை கண்டறிந்தான். மற்றும் வேட்டையாட செல்லும்பொழுது தன் வியர்வையின் மணம் அறிந்து எந்த கொடிய விலங்கும் தன்னை பின் தொடராமல் இருக்கவும், இறுதியாக தன் உடலை சுத்தம் செய்வதற்காகவும் மற்றும் உடல் சூட்டை தனிக்கவும் இந்த முறையை பயன்படுத்திக்கொண்டான். ஆனால் பலருக்கு தற்பொழுது உடலை சுத்தம் செய்வதற்கும், உடல் சூட்டை தணிக்க மட்டுமே குளியல் மேற்கொள்கிறோம் என்று எண்ணம் உருவாகி உள்ளது. 

இதற்கு காரணம் நாம் தான். பண்டைய காலங்களில் கூறிய ஒவ்வொரு பழமொழிக்கு பின்னால் ஒரு அறிவியல் இருப்பதை மறந்து அதை பின்பற்றிவருகிறோம். உண்மை அறிவியலை சொன்னால் அனைத்து மனிதர்களும் அதை பின்பற்ற மாட்டார்கள் என்று கருதிய சித்தர்கள், முனிவர்கள் மற்றும் பல மகான்கள் இறை நம்பிக்கை என்னும் வாயிலாக இதனை மக்களிடம் விதைத்தார்கள். மக்களும் இறைவனின் பெயரில் இருப்பதால் இதை சிறிதும் யோசிக்காமல் கடைபிடிக்க ஆரம்பித்தார்கள். பழமொழியை ஆராய்ந்து அதன் பின்னுள்ள அறிவியலை கண்டறிந்த சிலர் அறிவியல் பக்கம் ஈர்க்கப்பட்டு பல அறிவியல் சார்ந்த தகவல்களை இறைவனின் பெயரில் மக்களிடம் விதைத்தனர். 

குளியல் முறை :

குளியல் என்பது வெறும் உடலை சுத்தம் செய்வதற்கு மட்டுமல்ல உடலில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் தான். அகஸ்தியர் கூறிய முறைப்படி நாம் எப்படி குளிக்க வேண்டும் என்பதை இங்கு விரிவாக பார்ப்போம்.பொதுவாக நாம் குளிப்பதற்கு முக்கிய காரணம் நம் உடலில் இருக்கும் அசுத்தங்களை போக்குவதற்கு மட்டுமின்றி, நம் உடலில் இருக்கும் அதிக வெப்பத்தை போக்குவதற்காகவும் தான்.அக்னி பொதுவாக கீழிருந்து மேலாக எரியும். அந்த வகையில்சிறிது நீரை தலையில் தெளித்துக் கொள்ளவும். தண்ணீரை நம் கால் முதல் மேல் உடல் நோக்கி மெதுவாக நனைத்து வந்து கடைசியில் தலைக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.

இப்படி செய்வதால் உடலில் இருக்கும் அக்னி கீழிருந்து மேல் நோக்கி பயணிக்கும். நம் மண்டை ஓட்டுக்கு மட்டும் தான் எப்படிப்பட்ட வெப்பத்தையும்., அக்னியின் வேகத்தையும் தாங்கும் சக்தி உண்டு.தலையில் சிறிது தண்ணீர் தெளித்துள்ளதால் தலைக்கு வெப்பம் தாக்காமல், நம் உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் கண் மற்றும் காது வழியாக வெளியேறும்.

வாயில் நீர் வைத்திருத்தல்:

அதே போல் குளிக்கும் போது வாய் நிறைய எவ்வளவு நீர் வைத்திருக்க முடியுமோ, அவ்வளவு வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் உடலில் மேலெழும் வெப்பம் சாந்தப்படுத்தப்பட்டு, தலையை தாக்காமல் இருக்கும். குளித்து முடிக்கும் தறுவாயில் அந்த நீரை துப்பிவிடவும்.

குளித்த பின்:


தலை முதல் கால் வரை உள்ள உடல் பாகத்தில் நம் முதுகுப்பகுதியான ‘பிரஷ்டம்’ தான் மிகப்பெரியது. இங்கு தான் அக்னியின் வேகம் கூடுதலாக பரவும். இதனால் குளித்து முடித்த உடன் இந்த பகுதியைத் தான் முதலில் துடைக்க வேண்டும்.

நனைக்கப்பட்ட துண்டு:

நம்மில் பெரும்பாலும் குளித்த பின்னர் உலர்ந்த துண்டு தான் துவட்டப் பயன்படுத்துவோம். ஆனால் அது சரியான முறையல்ல. குளிக்கும் நீரிலேயே நாம் துவட்டும் துண்டை நனைத்து பிழிந்து துவட்டுவது தான் உகந்தது. உலர்ந்த துண்டு பயன்படுத்தி துவட்டுவதால் நம் உள் சூட்டை வேகமாக பரவச் செய்யும். இதனால் உடலில் உள் வலிகளை ஏற்படுத்தும்.

நீர் நிலைகளில் குளிக்கும் முறை:


நீர் நிலைகளில் ஓடிச் சென்று குதிக்காமல், கரையில் நின்று சிறிது நீரை எடுத்து தலையில் தெளித்த பின்னர், ஒரு இலை நீரில் விழுகிற வேகத்தில், நீர் கலங்காமல் மெதுவாக இறங்கி குளிக்க வேண்டும்.

அதே போல் நீரில் காரி உமிழ்வதும், துப்புவதும் கூடாது. ஏனெனில் நீரின்றி ஒரு உயிரினமும் கிடையாது. இதனால் நீரை விரயம் செய்வது கூடாது.

நன்றி உரை :

குளியல், உணவு முறை, உடற்பயிற்சி மற்றும் உறக்கம் இவைகளை முறையாக கடிப்பிடித்தாலே மனிதனின் உடலில் ஏற்படும் அனைத்து இன்னல்கள் மற்றும் உபாதைகளை தவிர்த்து இன்புற வாழலாம். என்னுடைய கட்டுரையில் ஏதேனும் பிழை மற்றும் கேள்விகள் இருந்தால் தயங்காமல் கீழுள்ள பதிவில் தெரியப்படுத்தலாம்.


Comments

Post a Comment

Popular posts from this blog

பஞ்ச பூதங்கள்

முருங்கையின் பயன்கள்